Monday, 7 September 2015

கள்ளர் பேரவை என்னும் பெயரில் ஒரு புளுகு மூட்டை நபர்?

கள்ளர் பேரவை என்னும் பெயரில் ஒரு புளுகு மூட்டை நபர்?
தமிழ் கள்ளர் இன உறவுகளே...வணக்கம்.
உங்கள் பெயரை சொல்லி கள்ளர் சர்வதேச பேரவை என்ற பெயரில் ஒரு தளம் இயங்குகிறது.அது இயங்கட்டும்.ஆனால்.அதில் சொல்லப்பட்ட தகவல்கள் உண்மையா என்றால்.........
ஆண்டவா..அதை நடத்தும் நபர் மிகப்பெரிய மலை முழுங்கி மகாதேவனாக இருப்பார் போல தோன்றுகிறது.
'மயன்' கம்மாளர்களின் மாமுனி.ஞானகுரு.எங்களது கோத்திரம் மய கோத்திரம்.நாங்கள் மயனின் வாரிசுகள்.
மயனின் வேலை படைப்பது.அது கம்மாளர்களுக்கே இன்றும் உரியதாக இருக்கிறது. கம்மாளர்களுக்கு படைப்பு என்பது ஆதி தொழில்.பிரமிடை எகிப்தில் படைக்க உளி செய்ய அங்கே போனவன் கம்மாளன்.
எங்கள் பெருந்தச்சர் கணபதி சிற்பி சொல்வார், "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் தோன்றிய மூத்தகுடி ஒன்று உண்டு. அந்தக் குடியின் வழித்தோன்றல்கள்தான் எங்கள் இனம். கடல் கொண்ட குமரிக் கண்டத்தைச் சேர்ந்தவன் நான். கடல் கொண்டு விட்டதால் அந்த இனம் அழிந்துவிட்டது என்று சொல்ல முடியாது. அந்த மக்கள் இப்போதும் ஆஸ்திரேலியாவில், ஹவாயில், மலேசியாவில் இன்னும் பல நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி உலகளாவிய ஒரு மரபை, ஒரு விஞ்ஞான மரபைச் சேர்ந்தவன் நான். எனவே, உலக இனத்தைச் சேர்ந்தவன் நான்". என்று.
ஆக,நாங்கள் உலக மரபை சேர்ந்தவர்கள்.நீங்களும் அப்படி ஒரு மரபாக இருக்கலாம்.
ஆனால், நீங்கள் மயன் வழி படைப்பாளிகள் என்று சொல்வீர்கள் என்றால்....நீங்கள் கம்மாளர் ஆகி விடுகிறீர்கள்.
ஆனால்,கள்ளர்கள் மயனின் வழிதோன்றல்கள் என்பது போல அந்த தளத்தில் அந்த புளுகு மூட்டை நபர் எழுதி இருக்கிறார்,அதில் நியாயமாக எந்த லாஜிக் உம் இருப்பதாக இல்லை.இதை யாரை கேட்டாலும் சொல்வர்.
கள்ளர் சர்வதேச பேரவை என்ற பெயரில் எழுதுபவருக்கு ஏன் இந்த புளுகு மூட்டை வேலை?
அவரது பொய் தகவல்களை மாற்றி கொண்டு உண்மையை எப்போதும் பின்பற்ற சொல்லுங்கள்.
புராணங்கள்.இதிகாசங்கள்,வரலாறுகள் ஆகியவற்றில் எல்லாம் யாரேனும் தனித்திறன் மிக்கவர் போன்று தோன்றினால் ...அதனை தங்கள் உடமை என்று போற்றுதல் கூடாது. நியாயமான காரணங்கள் இருக்க வேண்டும் என்பதை அந்த புளுகுமூட்டைகாரரிடம் எடுத்து சொல்லுங்கள் கள்ளர் உறவுகளே.
இதில் என்ன கொடுமை என்றால்...அவர் அந்த கட்டுரையில் எந்த இடத்திலும் கள்ளர்கள் மயனின் வாரிசுகள் என்றும் சொல்லவில்லை.
அப்படியானால், அவர் என்ன தான் சொல்ல வருகிறார்?
நீங்களும் பாருங்கள் நண்பர்களே.....
http://kallarperavai.weebly.com/296529953021299529923009299…
மீண்டும் சொல்கிறேன்..கள்ளர் உறவுகளே...நீங்கள் மயன் வழி தோன்றல் என்றால் நீங்கள் கம்மாளர் ஆகி விடுகிறீர்கள்.

No comments:

Post a Comment