Monday, 7 September 2015

கம்மாளர்களே..தயங்காமல் குல தொழிலை கற்று கொடுங்கள்.


கம்மாளர்களே..தயங்காமல் குல தொழிலை கற்று கொடுங்கள்.
தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால் ஏராளமான கல்லூரிகள் நிரந்தரமாக இழுத்து மூடப்படும் நிலையில் இருக்கின்றன.
எட்டு சுரைக்காய் போல் பொறியியல் படித்து வந்த பல மாணவர்கள் போதிய திறமை இல்லாத காரணத்தால் சென்னை சில்க்ஸின் சேலை,வேட்டி விற்பனை பிரிவில் சேல்ஸ்மேன் வேலைக்கு விண்ணப்பிக்கும் நிலை வந்துள்ளது. காலக் கொடுமை.
எதிர்காலத்தில் கையால் உருவாக்கப்படும் நகை, கலை நயம் மிக்க மர சாமன்கள்,இரும்பு வேலை பாடுகளுக்கு உலக அளவில் நல்ல எதிர்காலம் உள்ளது.
எனவே.உங்கள் பிள்ளைகளை எது படிக்க வைத்தாலும் கூடவே கண்டிப்பாக நமது தொழிலில் பழக்குங்கள். அவர்கள் தங்கள் மூளையை பயன்படுத்தி அந்த தொழிலை உச்சத்திற்கு எடுத்து செல்வார்கள்.இன்றைய சில சூழலால் சில பின்னடைவு இருக்கிறது என்பதற்காக சலித்து போய், 'என்னடா வேலை இது.. நம்மோடு இந்த வேலை போகட்டும்' என்று விடாதீர்கள்.
சிற்பம் செய்ய தெரிந்த சிற்பி அமெரிக்கா,ஆஸ்திரேலியா என்று பறக்கிறார்.ஆனால்.சாதாரண எஞ்சினியர் ஒரு சின்ன தொழிற்சாலையில் 10,000 சம்பளத்துக்கு சிங்கி அடித்து கொண்டே வறுமையில் வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருக்கிறார்.
அது இருக்கட்டும்.இப்போது நமது நண்பர் ஒருவர் நமது இனத்தில் இருக்கும் திறன் மிக்க தொழிலாளர் உருவாக்கும் பொருட்களை குறித்து விவரங்கள் சேகரிக்க ஆர்வமுடன் உள்ளார்.
தமிழ் கம்மாளர்கள் தங்கள் தொழில், தங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் படம், அவற்றை பற்றிய முழு விவரம். விலை,உங்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை கீழ்வரும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
buildersrainbow@gmail.com
தமிழகம் முழுவதும் உள்ள நமது இனத்து சொந்தங்கள் குறித்த இந்த விவரங்களை தொகுப்பதன் மூலம், அவர்கள் உற்பத்தி செய்யும் அந்த பொருட்களை தேவைப்படும் நபர்களுக்கு விற்பனை செய்யும் வகையில் வாய்ப்பு வழங்க இது உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment