Saturday, 14 May 2016

மதுரை பொற்கொல்லா்களின் புதிய முயற்சி


மதுரை நகர் பொற்கொல்லர்கள் இணைந்து புது முயற்சியை தொடங்கியுள்ளனர். அதாவது,அட்சய திருதிக்கு தெய்வ தங்க நகைகளை மக்களுக்கு செய்து தருகிறோம் என்று நகர் முழுக்க பரவலாக சுவரொட்டி ஓட்டி உள்ளனர் ஒவ்வொரு நகரிலும் மதுரை நகர பொற்கொல்லா்கள் போல, தங்க நகைகள் செய்யும் பொற்கொல்லா்கள் இணைந்து மக்களை நேரடியாக தங்கள் வசம் இழுக்கலாமே.
கோடிக்கணக்கில் ஆடம்பர ஷோரும்களை வைத்து அதன் செலவை நகை வாங்கும் நுகர்வோரின் தலையில் கட்டும் கல்யாண், ஆலுக்காஸகளுக்கு இது சவால் விடும்.
மதுரை பொற்கொல்லா்களின் இந்த புதிய முயற்சிக்கு மாற வாழ்த்துக்கள்.
-------------------------------------------
நாம் முன்பு சொன்னது பாேல் தமிழகத்தில் Handmade Antique model jewellery exclusive showrooms திறக்க மேற்கண்ட சுவரொட்டி அடித்த அமைப்பின் பொற்கொல்லா்களை கலந்து பேசி திட்டமிடலாம்.
பாரம்பரியமும், தொழிில் நுட்ப படைப்பு கடவுளான் மயன் வழி வந்த கம்மாளர்களின் கைகளால் உருவான நகைகள் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் நாள் தொலை‌வி‌ல் இல்லை.
இயந்திரங்கள் செய்யும் நகைகள் தெய்வீக சக்தியை பெறாது. மயன் வழி கம்மாளர் கைகளில் உருவாக்கம் பெறும் நகைகள் தான் தெய்வீக சக்தியை பெறும் என்பது உண்மை.. சரியான பாயிண்ட்டை பிடித்து போஸ்டா் அடித்துள்ளனர். வாழ்க.

No comments:

Post a Comment