Thursday, 16 July 2015

முன்னொரு காலத்தில் .......

உங்களுக்கு தெரியுமா.....இப்படி ஒன்னு இருப்பது ?


 முன்னொரு காலத்தில் .......

ஆமாம்.அப்படி தான் தொடங்க வேண்டும்.முன்னொரு காலத்தில் சென்னை கெல்லிஸ் பகுதியில் மில்லர்ஸ் ரோட்டில் விஸ்வேஸ்வர பவனம் என்ற கட்டிடம் இருந்தது,
இப்போதும் அது இருக்கிறது.இந்த கட்டிடம் கம்மாளர்கள் பலரிடம் பெற்ற தொகையை கொண்டு கட்டப்பட்டு எம்.ஜி.ஆர் அவர்களால திறந்து வைக்கப்பட்டது என்று நினைக்கிறேன்.
சென்னைக்கு போகும் நமது சொந்தங்கள் மிக குறைந்த வாடகையில் இந்த பவனத்தில் உள்ள அறைகளில் தங்கி கொள்ளலாம்.ஏழை எளிய நமது கம்மாள மக்களுக்கு சென்னையில் பெரிய விடுதிகளில் தங்க முடியாத நிலையில் இந்த விஸ்வேஸ்வர பவனம் ஒரு நிழல் குடை போல இருந்தது என்று சொல்லலாம்.ஆனால் இதெல்லாம் ஒரு காலம்.
இப்போது அப்படியெல்லாம் யாரும் தங்கிவிட முடியாது.இந்த விஸ்வேஸ்வர பவனை நிர்வகிக்கும் எந்த புண்ணியவான்களோ (!?)இங்குள்ள அறைகளை எல்லாம் யார் யாருக்கோ மாத வாடகைக்கு விட்டு பணம் வசூலிக்க தொடங்கி பல காலம் ஆகி விட்டது.இப்படி சம்பாதிக்கும் பணம் எல்லாம் எங்கே போகிறது என்பதும் அந்த புன்னியவாங்களுக்கே வெளிச்சம்.
இதை எல்லாம் கேட்க்க தான் யாரும் இல்லை.அனால் ஒரு செய்தி.பணம் வைத்திருக்கும் சிலருக்கு மட்டும் இந்த பவனத்தின் கதவுகள் எப்போதும் திறந்து இருக்கின்றன.
நம்மை போல் சாதாரண மக்கள் போய் கேட்டால்.......வரும் ஒரே பதில்.................'ரூம் புல்'.
அட போங்கையா......நீங்களும் உங்க விஸ்வேஸ்வர பவனமும்!
கூடிய விரைவில் நாங்கள் கட்டுவோம் ஏழை எளிய கம்மாளர்களுக்கு கட்டிடம்.
(புகைப்படம் :விஸ்வேஸ்வர பவனம்,சென்னை புரசைவாக்கம்.

No comments:

Post a Comment