Monday, 7 September 2015

மயன்கள் சுத்தத் தமிழர்கள். மயன்கள் கம்மாளர்கள்.

மயன்கள் சுத்தத் தமிழர்கள். மயன்கள் கம்மாளர்கள்.
''கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் தோன்றிய மூத்தகுடி ஒன்று உண்டு. அந்தக் குடியின் வழித்தோன்றல்கள்தான் எங்கள் இனம். கடல் கொண்ட குமரிக் கண்டத்தைச் சேர்ந்தவன் நான். கடல் கொண்டு விட்டதால் அந்த இனம் அழிந்துவிட்டது என்று சொல்ல முடியாது. அந்த மக்கள் இப்போதும் ஆஸ்திரேலியாவில், ஹவாயில், மலேசியாவில் இன்னும் பல நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி உலகளாவிய ஒரு மரபை, ஒரு விஞ்ஞான மரபைச் சேர்ந்தவன் நான். எனவே, உலக இனத்தைச் சேர்ந்தவன் நான்''.
(பெருந்தச்சர் கணபதி ஸ்தபதி ஒரு பேட்டியில் சொன்னது )
இனி கீழே உள்ள பதிவை படியுங்கள்.
Tamilarasi 3 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார்.உலகில் பல நாடுகளிலும் தமிழர்கள் பரவி வாழ்ந்து நாகரிகம், கலை, கட்டடம், அறிவியல் போன்றவற்றை வளர்த்தனர் என்பதற்குப் பலச் சான்றுகளைத் தந்தேன்.
மெக்சிகோவில் உள்ள கோசுமெல் தீவில் மயன் நாகரிகம், கட்டடம் போன்றவை உலக மக்களுக்கு வியப்பூட்டி வருகின்றன. இந்த மயன்கள் சுத்தத் தமிழர்கள். அவர்கள் தான் காலக் கணக்கீடு, நாட்காட்டியெல்லாம் தயாரித்தவர்கள்.
கோசுமெல் தீவில் மயன்கள் கால நாகரீகச் சின்னங்கள் காணப்படுகின்றன. இவர்கள் காலத்து நாகரிகக் கட்டடங்கள் பிரமிடுகள் போல இருக்கும். பலபடிகள் ஏறிச் செல்ல வேண்டும். மேலே ஏறிப்பார்த்தால் நாம் வானத்தில் தொங்குவது போல இருக்கும்.
இப்படியொரு தொழில் நுட்பத்துடன் அக்காலத்திலே எப்படிக் கட்டினார்களோ என்று உலக மக்கள் வியக்கின்றனர். மேலே நின்று பார்க்கும் போது தலைச் சுற்றும்.
உலக மெங்கும் அறிவும், கலையும், நாகரிகமும் வளர்த்தத்தமிழன் இன்று சாராயம், புகை, பான்பராக் என்று அடிமையாகி சீரழிகிறான்! எனவே அன்னிய மோகத்திலிருந்தும், ஆரிய மடமைகளிலிருந்தும் தமிழர்கள் விடுபட்டு, பழம்பெருமைகளை நிலை நாட்ட வேண்டும். இது தமிழர்களால் முடியும்!
டாக்டர் ஃபெல் (Dr.Fell) என்ற அமெரிக்க அறிஞர் தமிழர்கள் மெக்சிகோ வில் குடியேறிவாழ்ந்ததை உறுதி செய்கிறார்.
மெக்சிகோ நாட்டு அருங்காட்சியகப் பாதுகாவலர் ராமன் மேனா என்பவர் மாயன் எழுத்துமுறை தமிழ் மூலத்திலிருந்து வந்தது என்கிறார்.
அமெரிக்க மிக்சிகன் மாகாணப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உய்கோ ஃபோக்ஸ் (Hugo Fox) என்ற பேராசிரியர் சில ஆயிரமாண்டுகளுக்குமுன் தமிழ்மொழி மெக்சிகோவில் பேசப்பட்டது என்கிறார்.
அதே போல் ஆர்சியோ நன்ஸ் என்ற மொழி அறிஞர் தென்னமெரிக்காவில் தமிழ் பேசப்பட்டதை உறுதி செய்கிறார்.
இத்தாலி நாட்டில் தமிழ்
இத்தாலி நாட்டில் உரோமர்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கி.மு.3000 ஆண்டளவில் வடக்கு மெசப்பட்டோமியாவின் துருக்கி, ஆர்மேனியன் ஏரிப்பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் சிரியா, பாலஸ்தீனப்பகுதியில் பரவி பின் கி.மு.2000களில் காக்சிகோவின் தெற்குப் பகுதிக்குச் சென்று, பின் கி.மு 900 களில் இத்தாலிக்கு வந்தனர் என்கின்றனர்.
ரஷ்யப்பகுதி
சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன் அய்ரோப்பாவின் தென்பகுதி, ரஷ்யாவின் காக்கேசியப் பகுதி, வட ஆப்பிரிக்காவின் கடலோரப் பகுதிகளில் பேசப்பட்ட மொழி தமிழ் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
மஞ்சை வசந்தன்

No comments:

Post a Comment