Monday, 7 September 2015

கம்மாளர்களே...நீங்கள் ரிஷிகளின் பாரம்பரியத்தை சேர்ந்தவர்கள்.

கம்மாளர்களே...நீங்கள் ரிஷிகளின் பாரம்பரியத்தை சேர்ந்தவர்கள்.

கம்மாளர்களே.ஒரு வெளிநாட்டு பெண் நமது இனத்தின் தொன்மை பற்றி சிலாகித்து கூறுவதை பாருங்கள்.
இதன் தமிழ் ஆக்கம்:
'நேர்மறையான ஆற்றல் பொருளாக மாற முடியும்(' pure energy turning into matter) என்ற சூத்திரத்தை வைத்தும் , குவாண்டம் பிசிக்ஸ் என்று சொல்லப்படும் அணு அறிவியலை அடிப்படையாக கொண்டும், மாமுனி மயனின் வாஸ்து ரகசியங்களை மையமாக வைத்தும் இங்கு காணப்படும் கோவில் கட்டப்பட்டது.
கிரகங்களின் இயக்கம், இயற்பியல, கணிதம், சிற்பக்கலை, மற்றும் இந்த உலகில் காணப்படும் பிற கலைகள் அனைத்தும் வாஸ்து சாத்திரத்தை அடிப்படையாக கொண்டவையே. அதாவது மேற்சொன்ன இத்தனை கலைகளும் வாஸ்து என்னும் கலைக்குள் அடக்கம். ஒரு வாஸ்து நிபுணர் மேற்கண்ட அத்தனை விசயங்களையும் தெரிந்து இருந்தால் மட்டுமே அவர் வாஸ்துவில் பூரண நிபுணத்துவம் பெற்றவராக இருக்க முடியும்.

இந்த வாஸ்து அறிவியல் என்பது மகாபாரத மற்றும் புராண காலங்களில் வாழ்ந்த புகழ் பெற்ற கட்டுமான நிபுணனும், விஞ்ஞானியும் ஆன மாமுனி மயனால் உருவாக்கப்பட்டது. பின்னர் இந்த கலைகள் வியாசர் மற்றும் அன்றைய காலத்தில் வாழ்ந்த அதிசயத்தக்க ஆற்றல்கள் பெற்று இருந்த ரிஷிகளால் தொன்றுதொட்டு கொண்டு வரப்பட்டது.

அகத்திய மகரிஷி,போதி தர்மர்,ஆதிசங்கரர் போன்ற மிக பெரிய ரிசிகள் உள்பட எண்ணற்ற ரிசிகள் விஸ்வகர்மா இனத்தில் பிறந்தவர்கள்.
நாம் அறிந்த வரையில் இந்த சூத்திரத்தை சரியாக அறிந்த ஞானி தற்காலத்தில் வாழ்ந்த ஆதிசங்கரர். இவரும் விஸ்வகர்மா (விஸ்வகர்மா என்று தான் தமிழர் பழமை பற்றி அறியாத மேலை நாட்டினர் சொல்கின்றனர். நாம் மயன் என்கிறோம்) இனத்தில் பிறந்தவர். அவர் ஒரு விஸ்வகர்மா என்பதால் தனது இனத்தின் திறன் குறித்து மிக சரியாக அறிந்தவர்.

வாஸ்து சாஸ்திரம் என்பது 12 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது, மிக மிக பழமையானது. இந்த சாத்திரத்தின்படி கட்டப்பட்ட கோவில்கள், நகைகள்,சிற்பங்கள்,உலோக வேலைப்பாடுகள் அனைத்தும் பேரழகை கொண்டவை. அவை அனைத்தும் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்தவை.

இன்றைய விஸ்வகர்மா மக்களுக்கும் அவர்களது முந்தைய முன்னோர்களான ஞானிகள்.ரிஷிகளின் படைப்பற்றல் நிச்சயம் உள்ளது. கணபதி பெருந்தச்சர் போன்ற பேராற்றல் கொண்ட சிற்பிகளிடம் நான் கற்று கொண்டவை எனக்கு கிடைத்த பெரும் பரிசு.

(எனது வேண்டுகோள்: கம்மாளர்களே....நீங்கள் பல ஆயரம் கோடி ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த அறிவியல்,நுட்ப கலைகள் என்று அனைத்திலும் பெரும் ஆற்றல் பெற்று விளங்கிய ரிஷிகளின் வழியில் தோன்றியவர்கள்.
எந்த காரணம் கொண்டும் மது குடித்து உங்கள் ஆற்றலை நீங்களே இழந்து விடாதீர்கள்.உங்கள் வாரிசுகளை இது போன்ற கலைகளில் சிறப்புடன் கொண்டு வர முனையுங்கள்.நமது பாரம்பரிய ஆற்றலை மீண்டும் இந்த உலகில் நிறுவுவோம்

No comments:

Post a Comment