Saturday, 9 April 2016

தொழில் நுட்ப தொடர்-2
பிரமிப்பூட்டும் வார்ப்பு இரும்பு

இரும்பின் பயன்பாட்டை நன்கு தெரிந்தவர்கள் கம்மாளர்களே. உலக நாடுகள் பலவும் இரும்பின் தனித்தன்மையை பற்றி தெளிவாக அறிந்து கொள்ளும் முன்பு இரும்பை உருக்கி பல்« வறு கருவிகளை செய்யும் தனித்திறன் தமிழ் கொல்லர்களுக்கு இருந்தது. இதனை அறிந்து தான் எகிப்திய பிரமிடுகளை செதுக்க மதுரையில் இருந்து இரண்டு கொல்லர்களை எகிப்தியர்கள் அவர்கள் நாட்டுக்கு தருவித்து கொண்டனர் என்பது வரலாறு.

இரும்பில் வார்ப்பு இரும்பு முக்கியமான இடத்தை பெறுகிறது. அது பற்றி இந்த தொடரில் பார்க்கலாம். தொழிலுக்கான இயந்திரங்கள் மிகவும் பெரியதாகவும் கனமாகவும் தேவைப்படுவதால் அவை இலகுவில் உருகும் இயல்பை பெற்ற வார்ப்பு இரும்பினால் தயார் செய்யப்படுகின்றன. மற்றவித இரும்புகளில் காய்ச்சி அடித்து உருவாக்குவதற்கு அதற்கான பெரிய உலைக்களங்களும் கிடையாது.

மனித சக்தியினாலும் செய்வது சிரமம். ஆகையால் பெரிய இயந்திரங்களின் பாகங்களை அதற்கென உள்ள மிகப்பெரிய வார்ப்பு பட்டறைகளில் உருக்கி உருவாக்குகிறார்கள். அதாவது, முதலில் எந்த இயத்திரத்தை அல்லது பொருளை தயாரிக்க விரும்புகிறோமா, அந்த உருவங்களின் மாதிரிகள் மரக்கட்டையினால் செய்யப்பட்டு இதற்கென உள்ள பெட்டி போன்ற அமைப்பில் இடப்பட்டிருக்கும் புத்துமண்ணில் வைக்கப்பட்டு உருவாக்கப்பட வேண்டிய பொருளின் அச்சாக மாற்றப்படும். இவற்றை பேட்டர்ன் என்பார்கள்.

இந்த பேட்டர்ன் அச்சுக்கள் இருக்கும் மண் பெட்டிகள் நன்றாக உலர்ந்த பின் காய்ச்சிய இரும்புக் குழம்பை அந்த புற்றுமண் நிரம்பிய அச்சுக்களில் ஊற்றுவார்கள். இந்த இரும்புக் குழம்பு என்பது இரும்பு உருக்கும் அடுப்புக்களில் பிக் அயர்ன் கட்டிகள், சுண்ணாம்புக் கல், கல்கரி இவைகள் சேர்ந்து உருக்கித் தயாரிக்கப்பட்டது. இதற்குத் தான் வார்ப்பு இரும்பு என்று பெயர்.

இந்த வார்ப்பு குழம்பில் அதிகமான கரிப்பொருள் இருப்பதால் பிக் அயர்ன் போல் கடினமாக இருக்கும். இத்தன்மைக்கு கடினத்தன்மை என்று பெயர். வார்ப்பு இரும்புகள் பல ரகங்களில் தயாரிக்கப்படுகின்றன.

அதிக கடினமில்லாமலும் எளிதில் உடைந்து போகாமலும் இருக்கக்கூடிய தன்மை உடையவை மாலியபிள் காஸ்ட் அயர்ன் என்றும், பொதுவாக இயந்திரங்கனின் பாகங்கள் மற்றும் வார்ப்பு வேலைகளுக்கு பயன்படும் சாம்பல் நிறமுடைய வார்ப்பு இரும்பு காஸ்ட் அயர்ன் என்றும், எளிதில் தேய்ந்து போகாமலும் அதிக கடினமாகவும் இருக்கக்கூடிய குளிர்நத வார்ப்பு இரும்பு ஜில்டு காஸ் அயர்ன் என்றும் அதன் உருவாக்க இயல்புக்கு தகுந்தவாறு பலவாறாக அழைக்கப்படுகின்றன.

இவ்வித கடினமான குளிர்ந்த இரும்பினால் உருளைகள், மாவு அரைக்கும் தகடுகள், அரிசி உமி உடைக்கும் உருளைகள் வார்க்கப்படுகின்றன. இது எளிதில் உடையக்கூடியது. ஆனால் கடினமாக இருப்பதால் மேல் பாகம் எளிதில் தேய்ந்து போவது இல்லை.
தொடரும்...
அடுத்து தேன் இரும்பு அல்லது மறிக்கு இரும்பு பற்றி பார்க்கலாம்.

No comments:

Post a Comment