Saturday, 9 April 2016



தொழில்நுட்ப தகவல்கள்
உலோகங்கள் அறிமுகம்-1


கம்மாளர்கள் என்னும் தமிழ் பெருந்தச்சர்கள் உலகின் ஆதி பொறியாளர்கள். மனித சமுதாயம் உலோகங்களின் கண்டுபிடிப்பை அடுத்து நாகரீக வளர்ச்சியின் வேகத்தை எட்ட தொடங்கியது. உலோகங்கள் மனித வளர்ச்சியின் பாதையில் வெகுவேகமாக பயணிக்க வேண்டிய ஆக்கப்பூர்வமான வேலைகளை செய்தவர்கள் கம்மாளர்களே.
உலகின் புகழ் பெற்ற லண்டன் பாலம் உள்பட மிகப்பெரிய கட்டுமானங்களை நிர்மாணித்தவர்கள் தமிழ் கம்மாளர்கள் என்பது ஆச்சரியமான உண்மை, இது இன்றைய தலைமுறைக்கு கூட மறைக்கப்பட்ட விடயம். பொதுவாக, உலோகங்களை பலதலைமுறையாக கையாண்ட இனம் அதன் இளைய தலைமுறைக்கும் அவை குறித்து கற்றுத்தருவது முக்கியமானது. அதற்காகவே இந்த தொடர். இந்த தொடரில் உலோகங்கள் உள்பட கம்மாளர்கள் பயன்படுத்தி வந்த பல்வேறு விதமான தொழிற்கருவிகளை பற்றிய விளக்கமான பதிவிட உள்ளேன். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

உலோகங்கள் அறிமுகம் ஆன நிலையில் மனித நாகரீக வளர்ச்சியின் படிநிலையில் மிக வேகமான மாற்றங்கள் ஏற்பட்டன. அறிவியில் வளர்ச்சியில் பல்வேறு உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் இரும்பும் அதன் குடும்பத்தை சார்ந்த உலோகங்களும் அதிக அளவு பயன்பாட்டில் இருந்து வருகின்றன. குறிப்பாக, பெருந்தச்சர்களான கொல்லர்கள் ஆதிகாலத்தில் இருந்தே போர் ஆயுதங்களை தயாரிக்க இரும்பையே பயன்படுத்தினர். இன்று வரை அதே இரும்பு உலகில் காணப்படும் பல்வேறு பொருட்களை தயாரிக்க அதிமுக்கியமான உலோகமாக இருந்து வருகிறது.
உலோகங்களை, பொதுவாக இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று இரும்பும் அது தொடர்பான உலோகங்களும் ஆகும். இவைகளுக்கு ஆங்கிலத்தில் பெர்ரஸ் மெட்டல்ஸ் என்று பெயர். மற்றவை இரும்புக்கு தொடர்பற்ற உலோகங்கள். இவற்றுக்கு ஆங்கிலத்தில் பெர்ரஸ் அல்லாத உலோகங்கள் என்று பெயர்.
ஒரு உலோகம் இதில் எந்த இனத்தை சேர்ந்தது என்று தெரிந்து கொள்வதற்கு ஒரு சிறு காந்தத் துண்டு போதுமானது. உலோகங்கள் காந்தத்தினால் கவரப்பட்டால் அவை இரும்பு தொடர்பான உலோகங்கள் என்றும், அவ்வாறு கவரப்படாவிட்டால் அவை இரும்பு தொடர்பில்லாத உலோகங்கள் என்றும் அறியலாம்.
ஆனால் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் என்னும் துருப்பிடிக்காத எஃகு காந்தத்தினால் கவரப்படுவதில்லை. எனினும் இது இரும்பு தொடர்பான உலோகமே. வார்ப்பு இரும்பு, மறிக்கு இரும்பு, எஃகு இவைகளும் இரும்பு தொடர்பான உலோகங்களே. இரும்பு தொடர்பல்லாத உலோகங்களுக்கு அலுமினியம், செம்பு, நாகம் முதலியவை உதாரணங்கள் ஆகும்.
மேற்கூறிய இரும்பு தொடர்பில்லாத உலோகங்களை தொழில்துறையில் பயன்படுத்தும் வகையில் இரண்டு பிரிவுகளில் பிரிக்கலாம். ஒன்று தனி அல்லது மூல உலோகம். மற்றொன்று உலோகக் கலவை.
அதாவது, சுரங்களில் இயற்கையாகக் கிடைக்கும் ஓர்ஸ் என்னும் கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டவை மூல அல்லது தனி உலோகங்கள் ஆகும். இரண்டு அல்லது மேற்கொண்ட உலோகங்களை ஒன்றாக சேர்த்து உருக்கி எடுக்கும் உலோகங்கள் கலப்பு உலோகங்கள் ஆகும். இவை உலோகக் கலவை என்றும் அழைக்கப்படுகிறது.
தனியாக கிடைக்கும் சில உலோகங்களுக்கு உதாரணமாக அலுமினியம், செம்பு, வார்ப்பு இரும்பு ஆகியவற்றை கூறலாம்.
உலோக கலவைகளுக்கு உதாரணமாக, பித்தளை, வெண்கலம், துருப்பிடிக்காத எஃகு ஆகியவற்றை கூறலாம்.
தொடரும்....
அடுத்த பதிவில், இரும்பும் அதன் தொடர்பான உலோகங்கள் குறித்த விரிவான பார்வை.

No comments:

Post a Comment