மதுவை மறக்க ஓமியோபதி உதவும்
------------------------------------------------------
மது -குடிக்க தோன்றும் போது ...ஒரு நிமிடம் உங்கள் குழந்தைகளை நினைத்து பாருங்கள். குடிக்கும் அந்த பணத்தில் உங்களை நம்பி வந்த மனைவி,குழந்தைகளுக்கு எத்தனயோ துணி,புத்தகம்,பரிசுகள் வாங்கி கொடுத்து மகிழ்ச்சி படுத்தலாம்.
குடிக்கும் உங்களுக்கு உடலில் எந்த பாதிப்பெல்லாம் இருக்கும் என்று தெரியாது. திடீரென்று நீங்கள் உழைக்க முடியாத அளவு செயல் இழந்து போனால்....உங்கள் மனைவி,குழந்தைகளின் நிலை? செலவுக்கு யாரிடம் போய் கையேந்துவது?
உங்கள் மனைவி.குழந்தைகள் எப்படி வேண்டுமானாலும் போகட்டும் என்று அக்கறை இல்லையென்றால் எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம்.
மற்றவர்களை விடுங்கள்.மதுவால் உங்களுக்கும் பாதிப்புகள் ஏராளம்.
1. மது அருந்துவதால் களைப்பு நீங்குவது போல் இருக்கும். உண்மை அதுவல்ல.மது குடித்தவுடன் நேரடியாக இரத்தத்தில் கலப்பதால் தற்காலிகமாக உற்சாம் பிறக்கிறது. மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் நாளடைவில் மூளையையும், நரம்பு மண்டலத்தையும் பாதித்து உடல் நலத்தை சீர்குலைக்கிறது.
2. மது குடிப்பதினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு கல்லீரல் புற்று நோய் ஏற்படும். வாய், தொண்டை, உணவுக் குழாய்களில் புற்றுநோய் ஏற்படும்.( இப்படி புற்று நோய் வந்தால் ஆயரம் ஈட்டிகள் உடலெல்லாம் குத்தி கிழிப்பது போல் இருக்கும்.பயங்கர கொடுமை )
3. மதுவால் குடல் பாதிக்கப்பட்டு இரைப்பை சுழற்சி (Gastritis) ஏற்பட்டு குடலில் புண் ஏற்பட்டு சாப்பிட முடியாமல் போகும்.உடல் இளைக்க தொடங்கும். நாளடைவில் உணவே தொண்டைக்குள் இறங்காது.
4. தோளிலும், காலிலும் தசை நார் இழப்பு ஏற்படுகிறது.
உடலில் சர்க்கரை சத்தைச் சீர்படுத்தும் கணையம் பாதிக்கப்பட்டு சர்க்கரை நோய் நிச்சயம்..
5. அடிக்கடி மறதி ஏற்பட்டு சோர்வு ஏற்படும்.காலையில் தலைவலி பிழியும்.வேலைக்கு போக முடியாது. வேலை போகும்.பணம் வரும் வழி அடைபடும். குடும்பமே பாதிப்புக்கு உள்ளாக தொடங்கும்.
6. மதுவால் மூளை பாதிப்பு நோய் ஏற்பட்டு மன நோயாளியாக மாறும் நிலை வரும். சிலருக்கு பக்கவாதம் வரலாம்.
7. தொடர் குடியால். உடலின் அத்தனை சத்துக்களையும் மது எடுத்து கொள்வதால் ஒரு கட்டத்தில் நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது.பிறகு படுத்த படுக்கை தான்.
இப்படி கோளாறுகள் ஏராளம்.. அத்தனையும் மதுவினால் ஏற்படுவதே.
எனவே...மது குடிக்கும் முன்...முதல் பாராவை மீண்டும் படியுங்கள்.
-------------------------------------------------------------------------
மறுவாழ்வு அளிக்கும் ஹோமியோபதி மருத்துவம்
--------------------------------------------------------------------------
ஹோமியோபதி மருந்துகள் உடலில் மதுவினால் உண்டான நலக்கேடுகளை சீர்படுத்துவதோடு மனரீதியான தூண்டுதல்களையும் சரி செய்து நல்வாழ்வுப்படுத்த உதவுகிறது.
ஹோமியோபதியில் மது பழக்கத்தை ஒழிக்க பல மருந்துகள் இருந்த போதிலும் "கொர்கஸ் கிளாண்டஸ் ஸ்பிரிடஸ்" (Quercus Glandus spritus Q) எனும் மருந்து மதுவினால் உண்டான கோளாறுகள், தலைச்சுற்றல், நடுக்கம் போன்றவைகளை குணமாக்க உதவுவதோடு மதுவை மறக்கவும் துணை புரிகிறது.
மதுப்பழக்கம் ஏற்படுத்தும் நரம்புத் தளர்ச்சி, மன ரீதியான பிரச்சனைகள், குழப்பம், தூக்கமின்மை போன்றவைகளைக் குணப்படுத்த "அவினா சடைவா" என்ற மருந்தும், எப்போதும் எரிச்சலுடன் கூடிய மனநிலையுடனும் தலைவலி, காலையில் எழுந்த உடன் தலைச்சுற்றல், கண்களில் கூச்சம் போன்ற தொல்லைகளுக்கு "நக்ஸ்வாமிகா" போன்றவை உதவும்.
மதுவில் இருந்து ஓமியோபதி உதவியால் மீண்ட நண்பர்கள் நிறைய பேரை எனக்கு தெரியும். நீங்கள் மது பழக்கம் உடையவர் என்றால் உடனே ஒமியோபதியை நாடுங்கள்.

No comments:
Post a Comment